பாலுாட்டும் தாய்மார்களுக்கு எம்.எல்.ஏ.,நிதியுதவி வழங்கல்
பாலுாட்டும் தாய்மார்களுக்கு எம்.எல்.ஏ.,நிதியுதவி வழங்கல்
UPDATED : செப் 03, 2026 04:55 PM
ADDED : செப் 03, 2026 04:22 PM
அ நிறம் | அளவு
அரியாங்குப்பம்:மாணவெளி தொகுதியில் பாலுாட்டும் தாய்மார்களுக்கு நிதியுதவிற்கான ஆணையை, ராமு எம்.எல்.ஏ. பயனாளிகளுக்கு வழங்கினார்.
மணவெளி தொகுதி புதுச்சேரி அரசு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வழங்கப்பட்ட வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பாலுாட்டும் தாய்மார்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி தவளக்குப்பம் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இதில், முதல் குழந்தை தாய்மார்களுக்கு தலா 13 ஆயிரம் ரூபாய் வீதம், 15 நபர்களுக்கும், இரண்டாவது குழந்தை தாய்மார்களுக்கு தலா 18 ஆயிரம் ரூபாய் வீதம் 13 நபர்களுக்கு நிதியுதவிற்கான ஆணையை, ராமு எம்.எல்.ஏ., பயனாளிகளுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள், த.வெ.க., நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
