பாகூர் தொகுதியில் வளர்ச்சி பணிகள் அதிகாரிகளுடன் எம்.எல்.ஏ., ஆலோசனை
பாகூர் தொகுதியில் வளர்ச்சி பணிகள் அதிகாரிகளுடன் எம்.எல்.ஏ., ஆலோசனை
ADDED : மே 27, 2026 03:09 AM

பாகூர்: பாகூர் தொகுதியில், வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து, செந்தில்குமார் எம்.எல்.ஏ., பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பொதுப்பணித்துறை மூலமா பாகூர் தொகுதி யில், மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், தலைமை பொறியாளர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு, பாகூர் தொகுதி எம்.எல்.ஏ., செந்தில்குமார் தலைமை தாங்கினார். தலைமை பொறியாளர், செயற்பொறியாளர், நீர்பாசன கோட்ட செயற்பொறியாளர் உள்ளிட்ட பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பாகூர் தொகுதியில் தற்போது நடைபெற்று வரும் வளர்ச்தி திட்ட பணிகளின் நிலை குறித்து, செந்தில்குமார் எம்.எல்.ஏ., அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
நடைபெற்று வரும் திட்டப் பணிகளை விரைந்து முடிக்கவும், புதிதாக செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பாகூர் தொகுதியில் சுத்தமான மற்றும் தடையற்ற குடிநீர் வழங்குதல், புதிய சாலைகள் அமைத்தல், மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதி மேம்பாட்டு பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
