/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போர்வெல் அமைக்கும் பணி: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
போர்வெல் அமைக்கும் பணி: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
போர்வெல் அமைக்கும் பணி: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
போர்வெல் அமைக்கும் பணி: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : நவ 02, 2025 10:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்:  பாகூரில் 14.50 லட்சம் ரூபாய் செலவில், போர்வெல் அமைக்கும் பணியை செந்தில்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
பாகூரில் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் வகையில், பொதுப்பணித் துறை நீர்பாசன கோட்டம் சார்பில், 14.50 லட்சம் ரூபாய் செலவில், மருத்துவமனை வீதியில் உள்ள நீர் உந்து நிலையத்தில்,  போர்வெல் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது. செந்தில்குமார்  எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து போர்வெல் அமைக்கும் பணியை துவக்கி வைத்தார். பொதுப்பணித்துறை பொது சுகாதார கோட்ட உதவிபொறியாளர் பீனாராணி, இளநிலை பொறியாளர் கோபாலக்கிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.