/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ.44.65 லட்சத்தில் மேம்பாட்டு பணி பாகூரில் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

ADDED : ஜன 06, 2026 04:13 AM

பாகூர்: பாகூரில் தொகுதியில் 44.65 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகளை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், பாகூர் தொகுதி குருவிநத்தம் பெரியார் நகரில் 5 லட்சத்து 53 ஆயிரம் மதிப்பீட்டில் சிமென்ட் சாலை, ராமச்சந்திரா நகரில் ஒரு லட்சத்து 95 ஆயிரம் மதிப்பீட்டில் குடிநீர் குழாய் அமைத்தல், குருவிநத்தம் கீரிகாரன் தெருவில் 2 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பீட்டில் சிமென்ட் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல், பொதுப்பணித்துறை சிறப்பு கட்டடம் பிரிவு சார்பில், பாகூர் பாரதி அரசு மேல்நிலைப்பள்ளியில், 34 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் செலவில், கழிப்பறை அமைத்தல் மற்றும் தெற்கு பகுதியில் பழுதான மதில் சுவரை சீரமைத்திட அரசு ஆணை பெறப்பட்டுள்ளது.
இப்பணிகளுக்கான பூமி பூஜையை செந்தில்குமார் எம்.எல்.ஏ., செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் எழில்வண்ணன், இளநிலை பொறியாளர் ஜெயமாறன்ராஜ், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து இளநிலை பொறியாளர் புனிதவதி, தி.மு.க., பிரமுகர்கள், ஒப்பந்ததாரர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.