ரூ. 79.56 லட்சத்தில் வடிகால் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ரூ. 79.56 லட்சத்தில் வடிகால் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : மே 28, 2026 04:17 AM

அ நிறம் | அளவு
பாகூர்: ஏம்பலம் தொகுதி அரங்கனுார் கிராமத்தில் , 79 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் செலவில் வடிகால் அமைக்கும் பணியை, மோகன்தாஸ் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
புதுச்சேரி பொதுப்பணித்துறை கட்டடங்கள் மற்றும் சாலைகள் (தெற்கு) கோட்டம் சார்பில், ஏம்பலம் தொகுதி அரங்கனுார் கிராமத்தில், 79 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் செலவில் 'யூ'வடிவ வடிகால் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிக்கானபூமி பூஜை நிகழ்ச்சி நேற்று நடந்தது.மோகன்தாஸ் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி பூமி பூஜை செய்து,வடிகால் அமைக்கும் பணியை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில்,செயற் பொறியாளர் சந்திரகுமார், உதவி பொறியாளர் சரவணன், இளநிலை பொறியாளர் கலைச்செல்வன், ஒப்பந்ததாரர் சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
