/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதிய மும்முனை மின்பாதை பணி: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
புதிய மும்முனை மின்பாதை பணி: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
புதிய மும்முனை மின்பாதை பணி: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
புதிய மும்முனை மின்பாதை பணி: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : டிச 30, 2025 05:37 AM

திருபுவனை: திருபுவனை தொகுதிக்குட்பட்ட நல்லுார்பேட்டில் ஒரு முனை மின்பாதையை, மும்முனை மின்பாதையாக அமைக்கும் பணியை அங்காளன் எம்.எல்.ஏ., நேற்று துவக்கிவைத்தார்.
திருபுவனை தொகுதிக்குட்பட்ட நல்லுார்பேட் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட ஒருமுனை மின்பாதையில் மிகவும் குறைந்த மின்னழுத்த குறைபாடு நிலவி வந்தது. இதனால் மின் மற்றும் எலக்ட்ரானிக் உபகரணங்கள் அடிக்கடி பழுது ஏற்பட்டதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
இது குறித்து தொகுதி எம்.எல்.ஏ., அங்காளன் மேற்கொண்ட நடவடிக்கையின்பேரில், ஆதிதிராவிடர் சிறப்புக்கூறு நிதியின் கீழ் ரூ.9 லட்சத்து 8 ஆயிரம் செலவில் புதிய மும்முனை மின்பாதை அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. நிகழ்ச்சிக்கு அங்காளன் எம்.எல்.ஏ., தலைமையேற்று, பூமி பூஜை செய்து பதிய மின்பாதை பணிகளை துவக்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் மின்துறை உதவிப் பொறியாளர் பன்னீர்செல்வம், இளநிலைப் பொறியாளர் பழனிவேலு, ஜே.சி.எம்.,மக்கள் மன்ற தொகுதி தலைவர் ரவிக்குமார், துணை தலைவர் அருள்மணி மற்றும் கிராம பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

