/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலை அமைக்கும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
சாலை அமைக்கும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : ஆக 08, 2025 02:08 AM

புதுச்சேரி: வில்லியனுார் தொகுதியில் ரூ.26 லட்சம் மதிப்பில் புதிய சாலை அமைப்பதற்கான பணியை சிவா எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
வில்லியனுார் தொகுதியில், புதுச்சேரி நகராட்சி, கொம்பாக்கம் வார்டுக்கு உட்பட்ட பாப்பாஞ்சாவடி வள்ளலார் நகர், புஷ்பராஜ் நகர் பகுதி உள்ளது. இங்கு, எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதி ரூ. 26 லட்சம் ஒதுக்கீடு செய்து புதிய சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது.
சிவா எம்.எல்.ஏ., சாலை பணியை பூஜை செய்து துவக்கி வைத்தார். நகராட்சி செயற்பொறியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் வெங்கடாஜலபதி, இளநிலை பொறியாளர் ஞானவேல், தி.மு.க., தொகுதி பொருளாளர் கந்தசாமி, சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் ஹாலித், நிர்வாகிகள் ஜனா, சேகர், அருண், சுரேஷ், கந்தன், சிலம்பு, ராஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.