ரூ.46.54 லட்சத்தில் சாலை பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ரூ.46.54 லட்சத்தில் சாலை பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : ஜூலை 31, 2026 06:21 AM

அ நிறம் | அளவு
அரியாங்குப்பம்: நாணமேடு பகுதியில் 46.54 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை ராமு எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
மணவெளி தொகுதிக்குட்பட்ட நாணமேடு பகுதியில் பல ஆண்டுகளாக சாலை குண்டும் குழியுமாக இருந்து வருகிறது.
அதையடுத்து, பொதுமக்களின் கோரிக்கையின் பேரில், 46.54 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, பொதுப்பணித்துறை சார்பில், சிமென்ட் சாலை அமைக்கும் பணி துவக்கப் பட்டது.
இப்பணியை ராமு எம்.எல்.ஏ., நேற்று துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பீனாராணி, உதவி பொறியாளர் முகமது தமிமுல் அன்சாரி, இளநிலை பொறியாளர் கார்த்திக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
