/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மும்முனை மின்பாதை பணி; எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
மும்முனை மின்பாதை பணி; எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
மும்முனை மின்பாதை பணி; எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
மும்முனை மின்பாதை பணி; எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : ஜன 02, 2026 04:56 AM

திருபுவனை: மதகடிப்பட்டு பகுதியில் மும்முனை மின்பாதை அமைக்கும் பணியை அங்காளன் எம்.எல்.ஏ.,துவக்கி வைத்தார்.
திருபுவனைதொகுதி, மதகடிப்பட்டு அருகே உள்ள ராமாபுரம், டீச்சர் காலனி,ஜெய் ஆஞ்சேயர் அவென்யூ ஆகிய பகுதிகளில் கடும் மின் அழுத்த குறைபாடு நிலவி வந்தது. இதனால் மின் உபகரணங்கள் மற்றும் டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களும் அடிக்கடி பழுதானதால் பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர்.
இதையடுத்து, ஒரு முனை மின் பாதையை மும்முனை மின் பாதையாக மாற்றவும்,சேதமடைந்த மின் கம்பங்களை அகற்றி புதிய மின் கம்பங்கள் அமைக்கவும் அங்காளன் எம்.எல்.ஏ., மின்துறை அதிகாரிக்ளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
அதன்படி, ரூ.12,14 லட்சம் செலவில் புதிய மும்முனை மின்பாதை அமைக்கும் பணி ராமாபுரம் பகுதியில் நேற்று நடந்தது. அங்காளன் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
மின்துறை உதவி பொறியாளர் பன்னீர்செல்வம், இளநிலை பாறியாளர் பழனிவேல், கிராம முக்கியஸ்தர்கள், ஜே.சி.எம்., மக்கள் மன்ற தொகுதி தலைவர் ரவிக்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.

