/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கால்வாய் உயரத்தை அதிகரிக்க எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
/
கால்வாய் உயரத்தை அதிகரிக்க எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
கால்வாய் உயரத்தை அதிகரிக்க எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
கால்வாய் உயரத்தை அதிகரிக்க எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
ADDED : டிச 10, 2024 06:39 AM

புதுச்சேரி: ஊருக்குள் அடிக்கடி வெள்ளம் புகுந்து விடுவதால், கால்வாயை உயரத்தை அதிகரிக்க வேண்டும் என மத்திய குழுவிடம் சிவசங்கர் எம்.எல்.ஏ., வலியுறுத்தினார்.
புயல், வெள்ள சேதத்தை பார்வையிட வந்த மத்திய குழு கனகன் ஏரியில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் நேற்று ஆய்வு செய்தது. அப்போது தொகுதி எம்.எல்.ஏ., சிவசங்கர், மனு அளித்தார்.
தொடர்ந்து, சிவசங்கர் எம்.எல்.ஏ., மத்திய குழுவிடம் கூறியதாவது:
தாழ்வான பகுதியான உழவர்கரை பகுதிகள் ஒவ்வொரு வெள்ளத்திலும் தத்தளிக்கின்றன.
பவாணர் நகர், ஜவகர் நகர், எஸ்.எம்.எஸ்., காலனி, வெர்னோஸ் நகர், வசந்த நகர், வி.ஐ.பி., நகர், டாக்டர் காலனி, தியாகு பிள்ளை நகர், சுபாஷ்சந்திர போஸ் நகர், வயல்வெளி நகர் உள்பட 25 நகர்கள் தண்ணீர் சூழ்ந்து மிதக்கின்றன.
வெள்ள வடிவதற்கான வாய்க்கால் உயரம் குறைவாக உள்ளதே முக்கிய காரணமாக உள்ளது.
உயரம் குறைவாக உள்ளதால் நகருக்குள் வெள்ளம் அடிக்கடி புகுந்து விடுகின்றது. எனவே வில்லியனுார் ரோடு வரை கால்வாய் உயரத்தை 3 அடி அதிகரிக்க செய்ய மத்திய குழு உத்தரவிட வேண்டும் என்று முறையிட்டார்.
குறைகளை கேட்டறிந்த மத்திய குழுவினர், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.