இலவச பட்டா வழங்குவதற்கான இடங்களை வில்லியனுாரில் எம்.எல்.ஏ., ஆய்வு
இலவச பட்டா வழங்குவதற்கான இடங்களை வில்லியனுாரில் எம்.எல்.ஏ., ஆய்வு
ADDED : ஜூன் 17, 2026 06:50 AM

வில்லியனுார்: வில்லியனுார் தொகுதி யில் ஏழை எளிய மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்குவதற்கு அரசுக்கு சொந்தமான இடங்களை எம்.எல்.ஏ., மற்றும் கலெக்டர் தலைமையில் ஆய்வு செய் தனர்.
வில்லியனுாரில் வெற்றி பெற்ற ரவிக்குமார் எம்.எல்.ஏ., தொகுதியில் உள்ள ஏழை, எளிய மக்க ளுக்கு இலவச மனைப்பட்டா வழங்கவேண்டும் என, முதல்வர் ரங்கசாமியிடம் கோரிக்கை வைத்தார்.
அதனை தொடர்ந்து முதல்வரின் வழிகாட்டுதலின்படி, ரவிக்குமார் எம்.எல்.ஏ., கலெக்டர் குலோத்துங்கன், வில்லியனுார் சப் கலெக்டர் குமரன், நில அளவைத் துறை இயக்குனர் செந்தில் குமரன், தாசில்தார்கள் சேகர், சந்தோஷ்குமார் மற்றும் துறை அதிகாரிகள் நேற்று வில்லியனுார் தொகுதியில் வி.மணவெளி, உத்திரவாகிணிபேட், ஒதியம்பட்டு தனியார் அட்டை கம்பெனி மற்றும் கொம்பாக்கம் உள்ளிட்ட பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான இடங்களில் இலவச மனைப்பட்டா கொடுப்பதற்காக ஆய்வு செய்தனர்.
அப்போது அரசுக்கு சொந்தமான இடத்தின் பரப்பளவு குறித்து கேட்டறிந்தனர்.
கலெக்டர் தலைமை யிலான அதிகாரிகள் குழுவினர், வில்லியனுார் தொகுதியில் இடங் களை ஆய்வு செய்த பின், அங்கிருந்து மங்கலம் தொகுதியில் உள்ள வி.ஏ.ஓ., அலுவல கங்களில் ஆய்வு செய் தனர்.
அப்போது பணியில் இருந்த வி.ஏ.ஓ.,க்களிடம் சான்றிதழ் கொடுப்பது குறித்த தகவல்களை கேட்டறிந்தனர்.
அலுவலகத்திற்கு உரிய நேரத்திற்கு வரவேண்டும். பயனாளிகள் கேட்கப்படும் சான்றிதழ்கள் விசாரித்து உடனுக்குடன் வழங்க அறிவுறுத்தினர்.
