தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ எம்.எல்.ஏ., என்பது பதவியல்ல, மக்களை காக்கும் பொறுப்பு தற்காலிக சபாநாயகர் பேச்சு

 எம்.எல்.ஏ., என்பது பதவியல்ல, மக்களை காக்கும் பொறுப்பு தற்காலிக சபாநாயகர் பேச்சு

 எம்.எல்.ஏ., என்பது பதவியல்ல, மக்களை காக்கும் பொறுப்பு தற்காலிக சபாநாயகர் பேச்சு


ADDED : மே 21, 2026 04:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 21, 2026 04:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஏழை மக்களின் துயர் துடைக்கும் வகையில் எம்.எல்.ஏ.,க்களின் செயல்பாடு இருக்க வேண்டும் என தற்காலிக சபாநாயகர் அன்பழகன் பேசினார்.

சட்டசபை நிகழ்வை திருக்குறள் வாசித்து துவக்கி வைத்த தற்காலிக சபாநாயகர் அன்பழகன் பேசியதாவது:

புதுச்சேரியின் 16வது சட்டசபைக்கு தேர்வாகி வந்துள்ள அனைவரையும் வரவேற்கிறேன். தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் சரி பாதி பேர் முதல் முறையாக சட்டசபைக்கு வந்துள்ளீர்கள். எம்.எல்.ஏ., என்பது பதவியல்ல.

அது, மக்களை காக்கும் பொறுப்பாகும். பல்வேறு மாண்புகள் மற்றும் சிறப்புகளை பெற்ற இந்த மாமன் றம்.

அரசை ஆட்சி செய்யும் அதிகாரிகளை நேர்வழிப்படுத்துவதே சட்டசபை. இங்க, நாம் அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். சபை நிகழ்வில் தவறாமல் பங்கேற்பதை அனைவரும் உறுதி செய்ய வேண்டும்.

சட்டசபை நடவடிக்கை விதிகள் மற்றும் அதிகாரங்கள் சட்டசபை நடத்தை விதிகள் புத்தகத்தில் புதைந்து கிடக்கின்றன. உதாரணத்திற்கு அரை மணி நேர விவாதம், கவன ஈர்ப்பு தீர்மானம், ஒத்திவைப்பு பிரேரணை, அவசர தீர்மானம், பூஜ்ய நேர விவாதம் போன்றவற்றை சரியாக புரிந்து கொண்டு மக்கள் நலனுக்காக சட்ட விதிகளுக்கு உட்பட்டு, மக்கள் பிரச்னைகளை இச்சபைக்கு கொண்டு வர வேண்டும்.

இச்சபையில் கருத்துக்களை தெரிவிக்கும் அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும் மிகப்பெரிய பாதுகாப்பினை அரசியல் அமைப்பு வழங்கியுள்ளது.

அதை உணர்ந்து நம்முடைய செயல்பாடுகள் இருக்க வேண்டும். அரசு நிர்வாகம் தவறு செய்தால் அதற்கான ஆதாரங்களை வைத்துக் கொண்டு பேச முன்வர வேண்டும்.

வீண் விளம்பரத்திற்காக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சட்டசபையில் எழுப்புவது முறையற்ற செயல்.

அதேபோன்று, நமது குற்றச்சாட்டுக்கு சபைக்கு வந்து பதிலளிக்க முடியாத உயரதிகாரிகளை பற்றி அவதூறாக பேசுவதை தவிர்க்க வேண்டும். சபையின் மாண்பை பாதுகாக்க வேண்டும்.

நம்மை எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்த மக்களின் குரலாக சபையில் ஒலிக்க வேண்டும். அரசு போடும் பட்ஜெட்டை அலசி ஆராய்ந்து அரசுக்கு ஆக்கப்பூர்வமான கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.

ஏழை மக்களின் துயர் துடைக்கும் வகையில் நமது செயல்பாடு இருக்க வேண்டும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us