/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதிய பஸ் நிலையத்திற்கு பிரதமர் பெயர் வைக்காததால் ஜான்குமார் எம்.எல்.ஏ, எதிர்ப்பு
/
புதிய பஸ் நிலையத்திற்கு பிரதமர் பெயர் வைக்காததால் ஜான்குமார் எம்.எல்.ஏ, எதிர்ப்பு
புதிய பஸ் நிலையத்திற்கு பிரதமர் பெயர் வைக்காததால் ஜான்குமார் எம்.எல்.ஏ, எதிர்ப்பு
புதிய பஸ் நிலையத்திற்கு பிரதமர் பெயர் வைக்காததால் ஜான்குமார் எம்.எல்.ஏ, எதிர்ப்பு
ADDED : மே 02, 2025 04:44 AM

புதுச்சேரி:புதுச்சேரியில் இன்று திறக்கப்படும் புதிய பஸ் நிலையத்திற்கு பிரதமர் மோடி பெயர் வைக்கததால் ஜான்குமார் எம்.ஏல்.ஏ., எதிர்ப்பு தெரிவித்து, புறக்கணிக்கணிப்பதாக தெரிவித்துள்ளார்.
ஜான்குமார் எம்.எல்.ஏ., கூறுகையில்,
ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது வரவேற்கதக்கது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுச்சேரி பஸ் நிலையம் சிறப்பாக கட்டப்பட்டுள்ளது. அதை கட்டுவதற்கு மத்திய அரசு மூலம், பிரதமர் மோடி நிதி வழங்கியுள்ளார். எனவே பிரதமர் மோடியின் பெயரை வைத்திருக்கலாம். அவர் பெயர் வைக்காததால், எனக்கு மகிழ்ச்சி இல்லை அதனால், அதிர்ப்தியில் உள்ளேன்.
புதிய பஸ் ஸ்டேண்டில், பிரதமர் மோடி பெயரை வைக்க வேண்டும் முதல்வர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். உயிரோடு இருக்கும் பிரதமரின் பெயரை வைக்கலாமா என முதல்வர் என்னிடம் கேட்டார். குஜராத்தில், 200 கோடி செலவில், ஸ்டேடியம் கட்டியுள்ளனர். அதனால், அவர் பெயர் வைக்கலாம் என நான் தெரிவித்தேன்.
பஸ் நிலையம், ஏற்கனவே ராஜிவ்காந்தி பெயரில் உள்ளது.
அப்படி இருக்கும் போது, பிரதமர் பெயர் ஏன் வைக்க வேண்டும் என நிருபர் கேட்டதற்கு, , மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி மூலம் நிதி வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் பெயர் வைக்காததால் பஸ் நிலைய திறப்பு விழா நான் புறக்கணித்து, எதிர்ப்பு தெரிவிக்கிறேன்.
முன்னாள் முதல்வர் நாராயணசாமி காங்., கட்சியில் இருந்து, பா.ஜ.,விற்கு வந்தால், நுாறு சதவீதம் நான் தொகுதியை விட்டு கொடுக்க தயாராக இருக்கிறேன் என கூறினார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

