/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கவர்னருடன் எம்.எல்.ஏ., திடீர் சந்திப்பு
/
கவர்னருடன் எம்.எல்.ஏ., திடீர் சந்திப்பு
ADDED : ஜன 30, 2025 06:50 AM
புதுச்சேரி: கவர்னர் கைலாஷ்நாதனை, அசோக்பாபு எம்.எல்.ஏ., திடீரென சந்தித்து பேசினார்.
புதுச்சேரியில் பா.ஜ., தலைவர் நியமனம் இழுப்பறியாக உள்ளது. கடந்த 21ம் தேதி மாநில தலைவருக்கு தேர்தல் நடத்தி, அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், பா.ஜ., நியமன எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்துவிட்டு புது நிர்வாகிளுக்கு நியமன எம்.எல்.ஏ., பதவிகள் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் பரவியது.
இந்நிலையில், புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ., அசோக்பாபு நேற்று மதியம் கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து பேசினார். கவர்னர் மாளிகையில் இருந்து வெளியே வந்த அசோக்பாபு எம்.எல்.ஏ., நிருபர்களிடம் கூறுகையில், 'கோவில் கும்பாபிேஷகத்திற்கு அழைப்பு விடுக்க வந்தேன். நியமன எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்ய உள்ளதாக கூறும் தகவல் எனக்கு தெரியாது.
ராஜினாமா குறித்து கட்சி தலைமை என்ன கூறுகிறதோ அதற்கு கட்டுப்படுவோம். கட்சி தலைவர் யார் என்பது தெரியாது. கட்சி தலைமை தான் முடிவு செய்யும்' என்றார்.

