/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நீர்நிலை ஆக்கிரமிப்பு எம்.எல்.ஏ., அதிகாரிகள் ஆய்வு
/
நீர்நிலை ஆக்கிரமிப்பு எம்.எல்.ஏ., அதிகாரிகள் ஆய்வு
நீர்நிலை ஆக்கிரமிப்பு எம்.எல்.ஏ., அதிகாரிகள் ஆய்வு
நீர்நிலை ஆக்கிரமிப்பு எம்.எல்.ஏ., அதிகாரிகள் ஆய்வு
ADDED : ஏப் 23, 2025 04:15 AM

பாகூர் : கன்னியக்கோவிலில் நீர்நிலையை ஆக்கிரமித்து, தனியார் நிறுவனம் இயங்கி வருவதாக எழுந்த புகாரை அடுத்து செந்தில்குமார் எம்.எல்.ஏ., தலைமையில், அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.
பாகூர் தொகுதி, கன்னியக்கோவில், மணப்பட்டு எல்லை சாராயக்குட்டை என்ற நீர்நிலை பகுதி உள்ளது. இந்த பகுதியில் இயங்கி வரும் தனியார் பிளாஸ்டிக் மறு சுழற்சி தொழிற்சாலை, நீர் நிலையை ஆக்கிரமித்தும், அங்குள்ள காலி மனைகளில் பிளாஸ்டிக் கழிவு பொருட்களை அனுமதியின்றி திறந்த வெளியில் குவித்து வைத்து சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்தி வருவதாக புகார் எழுந்தது.
அதன்பேரில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., தலைமையில், பாகூர் தாசில்தார் கோபாலக்கிருஷ்ணன், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சதாசிவம், சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் வரைப்படத்தின் மூலம் அப்பகுதியை ஆய்வு செய்தனர்.
தனியார் தொழிற்சாலை நீர்நிலையை ஆக்கிரமித்து இயங்கி வருவதும், அனுமதி பெறாமல் காலி மனைகளில் கழிவு பொருட்களை கொட்டி வைத்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நீர்நிலையை மீட்டெடுக்கப்படும்; சம்மந்தப்பட்ட தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, தெரிவித்தனர்.

