/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இலவச பயிற்சி வகுப்பு நடத்த கவர்னரிடம் எம்.எல்.ஏ., மனு
/
இலவச பயிற்சி வகுப்பு நடத்த கவர்னரிடம் எம்.எல்.ஏ., மனு
இலவச பயிற்சி வகுப்பு நடத்த கவர்னரிடம் எம்.எல்.ஏ., மனு
இலவச பயிற்சி வகுப்பு நடத்த கவர்னரிடம் எம்.எல்.ஏ., மனு
ADDED : பிப் 22, 2024 07:07 AM

புதுச்சேரி : 'அரசு பணிகளுக்கான இலவச பயிற்சி வகுப்பை மீண்டும் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அசோக்பாபு எம்.எல்.ஏ., கவர்னர் தமிழிசையிடம் மனு அளித்தார்.
மனுவில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி அரசின் தொழிலாளர் துறை சார்பில், அரசு பணியிடங்களில் சேருவதற்கான போட்டி தேர்வுக்கு இளைஞர்களை தயார்படுத்தும் வகையில், இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இதனால், வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள இளைஞர்கள் பயன் பெற்றனர்.
இந்த பயிற்சி வகுப்பில் பயிலும் இளைஞர்களுக்கு பொது அறிவு புத்தகம், பயிற்சிக்கு தேவையான பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது.ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பயிற்சி அளித்தனர்.
கடந்த ஆண்டு நடந்த இலவச பயிற்சி வகுப்பில் படித்த 200 இளைஞர்களில் 57 பேர், அரசின் பல்வேறு துறைகளில் பணிக்கு தேர்வாகினர். தொழிலாளர் துறை சார்பில் நடந்து வந்த இலவச பயிற்சி வகுப்பு தற்போது நடக்கவில்லை.
தற்போது அரசின் மூலம் பல துறைகளில் பணிக்கு தேர்வு நடக்கிறது. எனவே, மீண்டும் இலவச பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்கு, தொழிலாளர் துறை அதிகாரிகளை அழைத்து ஆவண செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.