ADDED : டிச 23, 2024 06:19 AM

அ நிறம் | அளவு
திருபுவனை: திருபுவனை தொகுதிக்குட்பட்ட அரசுப் பள்ளிகளில் 2023-2024ம் கல்வியாண்டில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
மதகடிப்பட்டில் உள்ள எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு அங்காளன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, ஒவ்வொரு பள்ளியிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியருக்கு தனது சொந்த செலவில் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர், பெற்றோர்கள் பங்கேற்றனர்.
