/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மீனவர்களுக்கு ஐஸ் பெட்டி எம்.எல்.ஏ., வழங்கல்
/
மீனவர்களுக்கு ஐஸ் பெட்டி எம்.எல்.ஏ., வழங்கல்
ADDED : ஆக 06, 2025 08:38 AM

பாகூர் : மூ.புதுக்குப்பம் கிராமத்தை சேர்ந்த மீன் விற்பனையாளர்களுக்கு, விலையில்லா ஐஸ் பெட்டிகளை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., வழங்கினார்.
புதுச்சேரி அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், மீன் விற்பனையாளர்களுக்கு, மீன்களை பதப்படுத்தி விற்பனை செய்வதற்கு விலையில்லா ஐஸ் பெட்டி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, பாகூர் தொகுதி, மூ.புதுக்குப்பம் கிராமத்தை சேர்ந்த மீன் விற்பனையாளர்களுக்கு, ஐஸ் பெட்டி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு, மூ.புதுக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 160 மீன் விற்பனையாளர்களுக்கு விலையில்லா ஐஸ் பெட்டிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மீன்வளத் துறை துணை இயக்குநர் மீரா ஷாகித், ஆய்வாளர்கள் சுப்ரமணி, சிவப்பிரகாசம், கணேசன் உட்பட பலர் உடனிருந்தனர்.