/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நிவாரணம் வழங்க எம்.எல்.ஏ., கோரிக்கை
/
நிவாரணம் வழங்க எம்.எல்.ஏ., கோரிக்கை
ADDED : பிப் 06, 2025 07:10 AM

புதுச்சேரி; உப்பளம் தொகுதியில் மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., தாசில்தார் பிரிதிவ்விடம் கோரிக்கை மனு அளித்தார்.
மனுவில் கூறியிருப்பதாவது:
பெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரியில் 48.4 செ.மீட்டர் மழை பதிவானது. இது கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத மழைப் பொழிவு என்பதால், புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் பாதிப்புகளை ஏற்படுத்தியது.
அதிலும், குறிப்பாக உப்பளம் தொகுதி கடல் சார்ந்த, பெரிய வாய்கால், உப்பனாறு வாய்க்கால், நீர் நிலைகள் சூழ்ந்த தொகுதி என்பதால், மழையால் பல்வேறு வீடுகள் சேதமடைந்தன. ஆகையால், கனமழை பாதிப்புகளை உடனடியாக ஆய்வு செய்து, சேதமடைந்த வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு விரைந்து நிவாரண நிதி வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்தார். இதில், தொகுதி செயலாளர் சக்திவேல், கிளை செயலாளர்கள் காலப்பன், ராகேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.