/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விடுபட்ட வீடுகளுக்கு பட்டா எம்.எல்.ஏ., கோரிக்கை
/
விடுபட்ட வீடுகளுக்கு பட்டா எம்.எல்.ஏ., கோரிக்கை
ADDED : ஜன 09, 2025 06:21 AM

புதுச்சேரி: வாணரப்பேட்டையில் விடுப்பட்ட வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என, நில அளவை துறைஇயக்குனர் செந்தில் குமாரை, அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., சந்தித்து கோரிக்கை வைத்தார்.
உப்பளம் தொகுதி, வாணரப்பேட்டை நாகமுத்து மாரியம்மன் கோவில் பகுதியில் வசித்து வரும் பொது மக்களுக்கு நில அளவை துறை மூலம் பட்டா வழங்கப்பட்டது. அதில், 30க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு பட்டா வழங்க வில்லை.
இதையடுத்து, விடுப்பட்ட குடும்பங்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வலியுறுத்தி, நில அளவை துறை இயக்குனர் செந்தில்குமாரை, தொகுதி எம்.எல்.ஏ., அனிபால் கென்னடி சந்தித்து கோரிக்கை வைத்தார். அதற்கு, 10 நாட்களுக்குள் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, இயக்குனர் உறுதியளித்தார். ஆய்வாளர் சிவபாலன், கிளை செயலாளர் ராகேஷ் உடனிருந்தனர்.