/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மின் பிரச்னையை சரி செய்ய எம்.எல்.ஏ., கோரிக்கை
/
மின் பிரச்னையை சரி செய்ய எம்.எல்.ஏ., கோரிக்கை
ADDED : ஜூலை 16, 2025 01:14 AM

புதுச்சேரி : உப்பளம் தொகுதியில் நிலவிவரும் மின் பிரச்னையை சரி செய்ய வேண்டும் என, அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., மின்துறை உதவி பொறியாளர் முத்தானந்தத்தை சந்தித்து கோரிக்கை விடுத்தார்.
உப்பளம் தொகுதி, அம்பேத்கர் பூங்காவில் மின் விளக்குகள் எரியாமல் உள்ளது.
தமிழ்த்தாய் நகர், அப்பாவு மேஸ்திரி வீதி, வாணரப்பேட்டை மற்றும் பெரியபள்ளி பகுதிகளில் அடிக்கடி மின் அழுத்தம் குறைவு காரணமாக மின் சாதனங்கள் பழுதடைந்து வந்தன.
வம்பாகீரபாளையம், அங்காள அம்மன் ஆலயம் எதிரே ைஹமாஸ் விளக்கு பல மாதங்களாக எரியாமல் உள்ளது. இதனை உடனே சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., மின்துறை உதவி பொறியாளர் முத்தானந்தத்தை சந்தித்து கோரிக்கை வைத்தார்.
அதற்கு, மின் பிரச்னை குறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக மின்துறை அதிகாரி உறுதி அளித்தார்.
தி.மு.க., தொகுதி செயலாளர் சக்திவேல், கிளைச் செயலாளர்கள் இருதயராஜ், ராகேஷ், பிலிப் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

