தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/எம்.எல்.ஏ.,வின் ஹிந்தி பஞ்ச்... புதுச்சேரியில் செம ரகளை...

எம்.எல்.ஏ.,வின் ஹிந்தி பஞ்ச்... புதுச்சேரியில் செம ரகளை...

எம்.எல்.ஏ.,வின் ஹிந்தி பஞ்ச்... புதுச்சேரியில் செம ரகளை...


UPDATED : அக் 04, 2026 01:19 AM

ADDED : அக் 04, 2026 01:17 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 04, 2026 01:19 AM ADDED : அக் 04, 2026 01:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி தீயணைப்புத் துறை அலுவலகத்துக்கு எதிரே இருக்குற அந்த நூறாண்டு பழமை வாய்ந்த மரம், நேத்து திடீர்னு ‘லைவ் என்டர்டெயின்மென்ட்’ ஸ்பாட்டா மாறியது.

வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கு, மரத்தைப் பார்த்ததும் என்ன தோணிச்சோ தெரியல... ‘விறுவிறு’ன்னு உச்சிக்கு ஏறிப்போய், நான் இறங்கவே மாட்டேன் அடம் பிடிச்சு உக்காந்துவிட்டார்.

சுத்தி நின்ன மக்கள், ‘‘தம்பி, கீழே வாப்பா...’’ன்னு அன்பா கூப்பிட்டுப் பார்க்க, மேல இருந்தபடியே நோ... நோ...ன்னு ஹாலிவுட் குரங்கு ரேஞ்சுக்கு தலையாட்டிக்கொண்டே இருந்தார். விஷயம் தீயணைப்புத் துறைக்கு எட்ட, அவங்களும் பதறியடிச்சு ஓடி வந்தனர்.

வழக்கமா மரத்துல ஏறுற பூனையை மீட்குறவங்களுக்கு, இந்த ‘மனுஷ பூனை’ பெரிய சவாலா மாறியது. சரி, சாதுர்யமா யோசிப்போம்னு பிளான் பண்ணிய தீயணைப்பு வீரர்கள், ‘‘தம்பி கீழே வந்தா நல்லா சில்லுன்னு சரக்கு வாங்கித் தர்றோம்னு ஆபர் கொடுத்தனர்.

ஆனா அவர், முன்னாடி சரக்கைக் காட்டு... அப்புறம் இறங்குறதைப் பத்தி யோசிக்கிறேன்னு மரத்து மேல இருந்தபடியே கெத்தா டீல் பேசினார். அவங்களும் வேற வழியில்லாம கீழ இருந்து பாட்டிலைக் காட்டி ட்ரை பண்ணாங்க...

‘‘என்னையா காமெடி பண்றீங்க?னு வெக்ஸான அந்த வாலிபர், அடுத்த கட்டமா செஞ்ச காரியம்தான் உச்சக்கட்ட கூத்து. கீழ நின்னு முயற்சி பண்ணிட்டு இருந்த தீயணைப்பு வீரர்கள் மேலயே ‘யூரின் மழை’ பண்ணி அட்டகாசம் பண்ணினான்.

அந்த நேரத்துலதான் ‘மாஸ் என்ட்ரி’ கொடுத்தார் ராஜ்பவன் தொகுதி எம்.எல்.ஏ., விக்னேஷ் கண்ணன். மைக்கைப் பிடிச்சவர், டக்கென சரளமான ஹிந்தியில், ‘தம்பி... நான் தான் எம்.எல்.ஏ பேசுறேன். கீழே இறங்கி வா... உனக்கு என்ன வேணுமோ எல்லாம் பண்ணித் தர்றேன், யாரும் உன்னை ஒன்னும் செய்ய மாட்டாங்கனு ஹிந்தியில் பேசி சமாதானப்படுத்த ஆரம்பித்தார். பிரச்னை முடியும் வரை அங்கேயே இருந்தார்.

இதப் பார்த்த சுத்துபட்டு மக்கள், பரவாயில்லையேப்பா... நம்ம ஊர்லயும் ஹிந்தியைப் பொளந்து கட்டுற எம்.எல்.ஏ., இருக்காருனு கமெண்ட் அடிக்க, அந்த இடமே கலகலப்பானது. அப்புறம்தானே தெரியுது, நம்ம விக்னேஷ் கண்ணன் எம்.எல்.ஏ ஜிப்மர் கேந்திரிய வித்யாலயால படிச்ச முன்னாள் ஸ்டூடென்ட்னு..

மொத்தத்துல, நேத்து புதுச்சேரியில நடந்த இந்த சம்பவம் செம பன்னான ‘சோஷியல் மீடியா கன்டென்ட்டா மாறி வைரலாகி வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us