எச்.ஆர்.ஸ்கொயர் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்ய எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
எச்.ஆர்.ஸ்கொயர் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்ய எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
ADDED : ஜூன் 07, 2026 03:42 AM
பாகூர்: எச்.ஆர்.ஸ்கொயர் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என, செந்தில்குமார் எம்.எல்.ஏ., வலியுறுத்தி உள்ளார்.
அவர், முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு;
பாகூர், வில்லியனுார், அரியாங்குப்பம், நெட்டப்பாக்கம் மற்றும் மண்ணாடிப்பட்டு பகுதிகளில் எச்.ஆர். ஸ்கொயர் நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் துப்புரவு பணி முடங்கி உள்ளது.
குடியிருப்பு பகுதிகளில் குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.
கனரக குப்பை வாகனங்களில் 40 சதவீதத்திற்கும் குறைவான வாகனங்களை மட்டுமே இந்நிறுவனம் இயக்குகிறது. பேட்டரி வாகனங்களின் எண்ணிக்கையும் மிக குறைவாக உள்ளது.
தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்த ஊதியத்தை விட குறைவாக வழங்கப்படுகிறது.
எனவே, இந்நிறுவனத்திற்கு வழங்கப்பட வேண்டிய நிதி பட்டுவாடாக்கள் மற்றும் வாகனக் கட்டணங்களை முடக்க வேண்டும். விதி மீறல்களுக்கான இழப்பீடாக, இந்நிறுவனத்தின் முழு பிணைப்புத் தொகையையும் அரசு பறிமுதல் செய்ய வேண்டும். எச்.ஆர்.ஸ்கொயர் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.
எதிர்கால அரசு டெண்டர்களில் பங்கேற்க முடியாதபடி இந்நிறுவனத்தை கருப்பு பட்டியலில் வைக்க வேண்டும். மாற்று ஏற்பாடாக, உள்ளூர் சுய உதவிக்குழுக்கள் மூலம் கிராமப்புறங்களில் குப்பைகளை அகற்ற வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
