/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இல்ல சுப நிகழ்ச்சிகள் நடத்த எம்.எல்.ஏ., அலுவலகம் இலவசம்
/
இல்ல சுப நிகழ்ச்சிகள் நடத்த எம்.எல்.ஏ., அலுவலகம் இலவசம்
இல்ல சுப நிகழ்ச்சிகள் நடத்த எம்.எல்.ஏ., அலுவலகம் இலவசம்
இல்ல சுப நிகழ்ச்சிகள் நடத்த எம்.எல்.ஏ., அலுவலகம் இலவசம்
ADDED : டிச 08, 2024 04:49 AM
மக்கள் நெருக்கம் மிகுந்த முத்தியால்பேட்டை தொகுதியில் பொது நிகழ்ச்சிகள் நடத்த போதிய இடவசதி இல்லை. குறிப்பாக மகளிர் மேம்பாட்டு துறை, அங்கன்வாடி உள்ளிட்ட அரசு துறை நிகழ்ச்சிகளை நடத்தவும் போதிய இடவசதி இல்லை.
தனியார் மண்டங்களில் அதிக செலவு செய்து, நிகழ்ச்சிகளை நடத்த வேண்டியுள்ளது. இதனை கண்ட முத்தியால்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ., பிரகாஷ்குமார்,சின்னமணிக்கூண்டு அருகே உள்ள தனது அலுவலக வளாகத்தில் நிகழ்ச்சிகளை நடத்திக்கொள்ளுங்கள் என, அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
இதனால் அரசு சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகள் தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது ஏழை மக்களின் சுப நிகழ்ச்சிகளையும் இலவசமாக தனது அலுவலகத்தில் நடத்தி கொள்ளலாம் என, பிரகாஷ்குமார் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், 'இன்றைக்கு சுப நிகழ்ச்சி நடத்த அதிக செலவு செய்ய வேண்டியுள்ளது. இது ஏழை குடும்பங்களுக்கு சவாலானது. எனது அலுவலகத்தில் 150 பேர் வரை நிகழ்ச்சியில் பங்கேற்கும் அளவிற்கு இடவசதி உள்ளது.
எனவே ஏழை குடும்பங்களை சேர்ந்தவர்கள் எனது அலுவலகத்தில் சுப நிகழ்ச்சிகளை இலவசமாக நடத்தி கொள்ளலாம் என அறிவித்துள்ளோம். அவர்களுக்கான சில சீர் வரிசைகளை நானே செய்து கொடுக்கின்றேன்.
இது உண்மையான ஏழை குடும்பங்களுக்கு மட்டுமே. தகுதியான குடும்பங்களை நானே நேரடியாக தேர்வு செய்து, நடத்தி கொள்ள அனுமதித்து வருகிறேன்.
பொருளாரதார ரீதியாக அவர்கள் சிறிது தொகையை சேமிக்க உதவும் என்றார்.