/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அதிகாரிகளை கண்டித்து சட்டசபை முற்றுகை எம்.எல்.ஏ., போராட்டத்தால் புதுச்சேரியில் பரபரப்பு
/
அதிகாரிகளை கண்டித்து சட்டசபை முற்றுகை எம்.எல்.ஏ., போராட்டத்தால் புதுச்சேரியில் பரபரப்பு
அதிகாரிகளை கண்டித்து சட்டசபை முற்றுகை எம்.எல்.ஏ., போராட்டத்தால் புதுச்சேரியில் பரபரப்பு
அதிகாரிகளை கண்டித்து சட்டசபை முற்றுகை எம்.எல்.ஏ., போராட்டத்தால் புதுச்சேரியில் பரபரப்பு
ADDED : ஆக 06, 2025 08:52 AM

புதுச்சேரி : புதுச்சேரி சட்டசபையை, சுயேச்சை எம்.எல்.ஏ., முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
உருளையன்பேட்டை தொகுதி, கோவிந்தசாலை முடக்கு மாரியம்மன் கோவில் வீதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த சிலர், நேற்று முன்தினம் வயிற்று போக்கால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை, தொகுதி எம்.எல்.ஏ.,வான நேரு சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது, அவர்கள் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதால், வயிற்று போக்கு ஏற்பட்டதாக கூறினர்.
அதனைத் தொடர்ந்து நேரு எம்.எல்.ஏ., நேற்று காலை முடக்கு மாரியம்மன் கோவில் வீதியில் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். மேலும், வயிற்று போக்கு அறிகுறி இருந்தால், மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தினார். இப்பிரச்னை தொடர்பாக, காலை 11:00 மணிக்கு சுகாதாரத்துறை, பொதுப்பணி மற்றும் உள்ளாட்சி துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த, சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகத்திற்கு நேரு எம்.எல்.ஏ., சென்றார். அப்போது உ ள்ளாட்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அங்கு இல்லை.
இதனால், ஆவேசமடைந்த நேரு எம்.எல்.ஏ., அதிகாரிகளை கண்டித்து, தொகுதி மக்களு டன் சட்டசபையை முற்றுகையிட்டார். தகவலறிந்த பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வீரசெல்வம், புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி ஆகியோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.,வை ஆலோசனை கூட்டத்திற்கு அழைத்து சென்றனர்.
சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகத்தில் இயக்குநர் செவ்வேள் தலைமையில் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற நேரு எம்.எல்.ஏ., அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்படா ததால், மக்கள் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டினார். அதனை ஏற்றுக் கொண்ட அதிகாரிகள், பழுதடைந்த குடிநீர் குழாய் மற்றும் கழிவு நீர் கால்வாய்களை உடனடியாக சீரமைத்து தருவதாக உறுதியளித்தனர். எம்.எல்.ஏ.,வின் திடீர் முற்றுகை போராட்டத்தால் சட்டசபை வளாகத்தில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.