/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காப்பகங்கள் மூடப்படுவது குறித்து விசாரணை தேவை ம.மு.க., கோரிக்கை
/
காப்பகங்கள் மூடப்படுவது குறித்து விசாரணை தேவை ம.மு.க., கோரிக்கை
காப்பகங்கள் மூடப்படுவது குறித்து விசாரணை தேவை ம.மு.க., கோரிக்கை
காப்பகங்கள் மூடப்படுவது குறித்து விசாரணை தேவை ம.மு.க., கோரிக்கை
ADDED : மே 13, 2025 06:16 AM
புதுச்சேரி, : புதுச்சேரியில் மகளிர் மேம்பாட்டு துறையின் காப்பகங்கள் மூடப்பட்டு வருவது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த 2016ல் மத்திய சமூக நல வாரியத்தை மூடுவது என்று மத்திய அரசு முடிவு செய்தபோது இத்திட்டம் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டது. அதன்படி புதுச்சேரியில் செயல்பட்டு வந்த 200 காப்பகங்கள் புதுச்சேரி அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைக்கு மாற்றப்பட்டு செயல்படுத்தப்பட்டது.
இதற்கான நிதி உதவி மத்திய அரசு வழங்கி வந்தது. சமூக முக்கியத்துவம் வாய்ந்த மத்திய அரசின் திட்டத்தை, புதுச்சேரி அரசு ஏன் மூடி வருகிறது என்பது வியப்பாக இருக்கிறது.
இது குறித்து விரிவான விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும். கவர்னர், முதல்வர், துறை அமைச்சர் உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு நிலுவையில் உள்ள மூன்று ஆண்டுகளுக்கான நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற்று தன்னார்வ நிறுவனங்களுக்கு அளிக்க வேண்டும்.
இத்திட்டத்தை செயல்படுத்த மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையிலிருந்து ஒரு துணை இயக்குனரை நியமித்து திட்டம் தொடர்பான முடிவுகள் எடுக்கும் அதிகாரத்தை அவருக்கு அளிக்க வேண்டும். இத்திட்டம் விதியின்படி செயல்படுத்தப்பட்டு புதுச்சேரி குழந்தைகள் பயன்பெற வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.