/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நடமாடும் மருத்துவ சேவை: கவர்னர் துவக்கி வைப்பு
/
நடமாடும் மருத்துவ சேவை: கவர்னர் துவக்கி வைப்பு
ADDED : நவ 05, 2025 07:54 AM

பாகூர்: கிருமாம்பாக்கம் ஆறுபடை வீடு மருத்துவமனை, சேவாபாரதி சார்பில், நடமாடும் இலவச மருத்துவ சேவை வாகனத்தை கவர்னர் கைலாஷ்நாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
கிருமாம்பாக்கம் ஆறுபடை வீடு மருத்துவமனை,சேவாபாரதி அமைப்பு, கனரா வங்கி ஆகியன இணைந்து, இலவச நடமாடும் மருத்துவ வாகன சேவை அளிக்க திட்டமிட்டது. இச்சேவை துவக்க விழா கிருமாம்பாக்கம் ஆறுபடை வீடு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லுாரியில் நடந்தது.
விழாவிற்கு ராஸ்டிரிய சேவா பாரதி அமைப்பு செயலர் சுதிர்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கவர்னர் கைலாஷ்நாதன் பங்கேற்று, நடமாடும் மருத்துவ சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
விநாயகா மிஷன் ரிசர்ச் பவுண்டேஷன் வேந்தர் கணேசன், கனரா வங்கி இயக்குனர் நலினி பத்பநாபன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். சேவாபாரதி நிர்வாகிகள் சித்தார்த், சந்திரபாபு, விநாயகா மிஷன் ரிசர்ச் பவுண்டேஷன் நிர்வாக குழு உறுப்பினர் சுரேஷ்சாமூவேல், டீன் மணி, மருத்துவ கல்லுாரி துணை பதிவாளர் பெருமாள்,மருத்துவ கண்காணிப்பாளர்கள், டாக்டர்கள் பங்கேற்றனர்.
இலவச நடமாடும் மருத்துவ வாகனம்,கடலுார் மாவட்டத்திற்குட்பட்ட கிராம பகுதிகளில் பொது மக்களின் வாழ்விடங்களை தேடிச் சென்று அவர்களுக்கு பரிசோதனைகள் செய்து, சிகிச்சை அளிக்கிறது.

