/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மொபைல் எண் புதுப்பிப்பு இயக்கம் போக்குவரத்து ஆணையர் தகவல்
/
மொபைல் எண் புதுப்பிப்பு இயக்கம் போக்குவரத்து ஆணையர் தகவல்
மொபைல் எண் புதுப்பிப்பு இயக்கம் போக்குவரத்து ஆணையர் தகவல்
மொபைல் எண் புதுப்பிப்பு இயக்கம் போக்குவரத்து ஆணையர் தகவல்
ADDED : ஜூலை 25, 2025 02:36 AM
புதுச்சேரி: வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களுக்கான மொபைல் எண் புதுப்பிப்பு இயக்கம் துவங்கப்பட் டுள்ளது.
போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் செய்திக்குறிப்பு:
புதுச்சேரி அரசின் போக்குவரத்து துறை, மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்துடன் இணைந்து, மக்களுடன் நேரடி தொடர்பை மேம்படுத்தவும், சேவைகள் தொடர்பான தகவல்களை சரியான நேரத்தில் வழங்கவும் சிறப்பு மொபைல் எண் புதுப்பிப்பு இயக்கத்தை ஆரம்பித்துள்ளது.
பல்வேறு வாகன உரிமையார்கள், ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் தங்களது மொபைல் எண்ணை தேசிய 'வாகன்' மற்றும் 'சாரதி' தரவுத்தளங்களில் புதுப்பிக்கவில்லை என்பது தெரிகிறது.
இதன் காரணமாக பதிவு, லைசன்ஸ் புதுப்பிப்பு, சட்ட அறிவிப்புகள் உட்பட முக்கிய தகவல்கள் அவர்களுக்கு செல்வதில்லை. இந்த சிக்கலை தீர்க்க, தேசிய தகவல் மையம், ஆதார் அடிப்படையிலான பாதுகாப்பான முறையில் அனைத்து வாகன உரிமையாளர்களும், ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களும் மொபைல் எண்களை புதுப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, அனைத்து வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் உடனடியாக https://parivahan.gov.in இணையதளத்தின் மூலம் தங்களது ஆதார் இணைகக்கப்பட்ட மொபைல் எண்ணை புதுப்பிக்கலாம்.
இதற்காக, அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மக்களுக்கு உதவ முகாம்கள் அமைக்கப்பட்டு, விழிப்புணர்வு பேனர்கள் வைக்கப்பட உள்ளன.
மேலும், விபரங்களுக்கு அருகிலுள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அணுகவும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.