/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஓட்டுச்சாவடிகளுக்கு வெளியே இனி மொபைல் போன் டிபாசிட் கவுன்டர்; இந்திய தேர்தல் ஆணைய துணை இயக்குநர் பவன் தகவல்
/
ஓட்டுச்சாவடிகளுக்கு வெளியே இனி மொபைல் போன் டிபாசிட் கவுன்டர்; இந்திய தேர்தல் ஆணைய துணை இயக்குநர் பவன் தகவல்
ஓட்டுச்சாவடிகளுக்கு வெளியே இனி மொபைல் போன் டிபாசிட் கவுன்டர்; இந்திய தேர்தல் ஆணைய துணை இயக்குநர் பவன் தகவல்
ஓட்டுச்சாவடிகளுக்கு வெளியே இனி மொபைல் போன் டிபாசிட் கவுன்டர்; இந்திய தேர்தல் ஆணைய துணை இயக்குநர் பவன் தகவல்
ADDED : ஜூன் 12, 2025 07:21 AM

புதுச்சேரி : ஓட்டுச் சாவடிகளுக்கு வெளியே மொபைல் போன் டிபாசிட் கவுன்டர்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என, இந்திய தேர்தல் ஆணைய ஊடக துணை இயக்குநர் பவன் தெரிவித்தார்.
இந்திய தேர்தல் ஆணையம், லோக்சபா, சட்டசபை தேர்தல்களில் பல புதிய சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. இது குறித்து இந்திய தேர்தல் ஆணைய ஊடக துணை இயக்குநர் பவன், புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர், துணை தலைமை தேர்தல் அதிகாரிகள் தில்லைவேல், ஆதர்ஷ் ஆகியோர் நேற்று ஊடக பிரநிதிகளுடன் கலந்துரையாடினர்.
புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர், இந்திய தேர்தல் ஆணைய ஊடக பிரிவு துணை இயக்குநர் பவன் கூறியதாவது:
லோக்சபா, சட்டசபை தேர்தல் நாளன்று வாக்காளர்களின் வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. தேர்தல் ஓட்டுப்பதிவின்போது ஓட்டுச்சாவடியில் இருந்து 200 மீட்டர் தொலைவில் அதிகாரப்பூர்வமற்ற வாக்காளர் அடையாள சீட்டுக்களை வாக்காளர்களுக்கு கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் இதுவரை வழங்கி வந்தனர்.
ஆணையத்தின் புதிய முடிவின்படி இந்த துாரமானது குறைக்கப்பட்டுள்ளது. தற்போது ஓட்டுச்சாவடியின் நுழைவு வாயிலில் இருந்து 100 மீட்டர் தொலைவில் அதிகாரப்பூர்வமற்ற வாக்காளர் அடையாள சீட்டுக்களை விநியோகிப்பதற்கு அனுமதிக்கப்பட உள்ளது.
வாக்காளர்களுக்கு உதவும் வகையில் ஓட்டுச்சாவடிகளுக்கு வெளியே மொபைல் போன் டிபாசிட் கவுன்டர்களை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்பு ஒரு ஓட்டுச்சாவடியில் 1,500 வாக்காளர்கள் எண்ணிக்கை இருந்தது. இந்த எண்ணிக்கை தற்போது 1,200 வாக்காளர்களாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தில் தற்போது 40க்கும் மேற்பட்ட செயலிகள், இணையதளம் பயன்பாட்டிற்கு உள்ளது. இவை அனைதும் ஒரு குடையின் கீழ் ECINET என்ற புதிய செயலியை இந்தியா முழுதும் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த செயலி ஏற்கனவே இடைத்தேர்தல் நடந்த குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் பயன்பாட்டிற்கு வந்தது. நவம்பரில் நடக்கும் பீகார் தேர்தலில் பயன்பாட்டிற்கு வரும்.
போலியான வாக்காளர் அட்டையை நீக்க இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறது. ஏற்கனவே பிறப்பு இறப்பு பதிவேடு இயக்குநரகம் மூலம் இறப்புகள் விபரங்கள் பெற்று இறந்த வாக்காளர்கள் நீக்கப்பட்டு வருகின்றனர். நேரிலும் விண்ணப்பம், ஆட்சேபனை பெற்று வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தப்படுகிறது.
பொதுவாக இடைத்தேர்தலுக்கு முன் சுருக்குமுறை வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படாது. தற்போது இடைத்தேர்தலுக்கு முன் சுருக்கு முறை வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இவ்வாறு அவர்கள் கூறினார்.