தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நடமாடும் ஓட்டுப்பதிவு இயந்திரம் விழிப்புணர்வு பிரசாரம்

 நடமாடும் ஓட்டுப்பதிவு இயந்திரம் விழிப்புணர்வு பிரசாரம்

 நடமாடும் ஓட்டுப்பதிவு இயந்திரம் விழிப்புணர்வு பிரசாரம்


ADDED : பிப் 09, 2026 04:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 09, 2026 04:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சட்டசபை தேர்தலையொட்டி, நடமாடும் ஓட்டுப் பதிவு இயந்திரம் செயல்முறை விழிப்புணர்வு நிகழ்ச்சி துவங்கியது.

மாவட்ட தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர் செய்திக்குறிப்பு:

புதுச்சேரியில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரம் மற்றும் ஓட்டுப்பதிவு செயல்முறை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுக்கு, மாவட்ட தேர்தல் அலுவலகம், கலெக்டர் அலுவலகத்தில் இ.வி.எம்., காட்சிப்படுத்தல் மையம் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்தில் ஒரு இ.வி.எம்., காட்சிப்படுத்தல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனுடன், விழிப்புணர்வு பிரசாரத்திற்காக ஒரு நடமாடும் காட்சிப்படுத்தல் வாகனம் இயக்கப்படுகிறது.

கடந்த 6ம் தேதி முதல் இந்த வாகனம் தினமும் ஒரு தொகுதியில் சுற்று பயணம் செய்கிறது. தேர்தல் தொடர்பான விளக்கத்திற்கு 1950 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us