/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாதிரி ஓட்டுச்சாவடி மாணவர்கள் அசத்தல்
/
மாதிரி ஓட்டுச்சாவடி மாணவர்கள் அசத்தல்
ADDED : ஜன 06, 2024 06:48 AM

புதுச்சேரி : காரைக்கால் அரசு தொடக்கப் பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில் மாணவர்கள் தங்கள் படைப்புகளை ஆர்வமுடன் காட்சிப்படுத்தினர்.
காரைக்கால், அகலங்கண்ணு அரசு தொடக்கப்பள்ளியில் நேற்று அறிவியல் கண்காட்சி நடந்தது. இதில் ஆசிரியர் பாட்சா வரவேற்றார். தலைமை ஆசிரியர் மீனா தலைமை தாங்கினார். பள்ளி துணை ஆய்வாளர் வட்டம் - II பால்ராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
கண்காட்சியில் 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் படைப்புகளை பார்வைக்கு வைத்திருந்தனர். கண்காட்சியில், மாணவர்கள் வைத்திருந்த மாதிரி ஓட்டுச்சாவடி அனைவரை யும் கவர்ந்தது. இதில், புதிய வாக்காளர்கள் எப்படி ஓட்டு போடுவது என்பது குறித்து மாணவர்கள் செயல்முறை செய்து காண்பித்தனர்.
தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சியை, ஆசிரியர் சத்தியராஜ் தொகுத்து வழங்கினார். இதில் சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கண்காட்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஆரோக்கியமேரி, ஜெயராணி, கிரண் மற்றும் பெற்றோர்கள் செய்திருந்தனர். ஆசிரியை இந்துமதி நன்றி கூறினார்.