/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நுரையீரல் பிரச்னைகளை கண்டறிய அரசு மருத்துவமனையில் நவீன கருவி
/
நுரையீரல் பிரச்னைகளை கண்டறிய அரசு மருத்துவமனையில் நவீன கருவி
நுரையீரல் பிரச்னைகளை கண்டறிய அரசு மருத்துவமனையில் நவீன கருவி
நுரையீரல் பிரச்னைகளை கண்டறிய அரசு மருத்துவமனையில் நவீன கருவி
ADDED : மே 17, 2025 11:26 PM

புதுச்சேரி, இந்திரா காந்தி அரசு மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு நிறுவனத்தில் காது, மூக்கு மற்றும் தொண்டை வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவில் நவீன மயமாக்கப்பட்ட பல்வேறு சிகிச்சை கருவிகள் பொருத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, குரல் மற்றும் குரல்வளை சம்பந்தப்பட்ட பிரச்னைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் ஸ்ட்ரோபோஸ்கோப் எனப்படும் நவீன கருவியும், சுவாசக்குழாய் மற்றும் நுரையீரலில் இருக்கும் பிரச்னைகளை கண்டறியும் பிராங்கோஸ்கோப் மற்றும் அதன் மூலம் மூச்சுக்குழாயில் ஏற்படும் அடைப்புகளை நீக்குவதற்கான நவீன சிகிச்சை கருவிகளும் புதியதாக நிறுவப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இக்கருவிகள் மூலம் மூச்சுக்குழாய், நுரையீரல் மற்றும் குரல்வளை போன்றவற்றில் ஏற்படும் பிரச்னைகளை துல்லியமாக கண்டறிந்து உரிய சிகிச்சை பெற முடியும்.