நவீன உள்விளையாட்டு அரங்கம் ரவிக்குமார் எம்.எல்., கோரிக்கை
நவீன உள்விளையாட்டு அரங்கம் ரவிக்குமார் எம்.எல்., கோரிக்கை
ADDED : ஆக 28, 2026 06:11 PM
புதுச்சேரி: வில்லியனுாரில் நவீன உள்விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும் என, ரவிக்குமார் எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்துள்ளார்.
மானிய கோரிக்கையின் மீது அவர் எம்.எல்.ஏ., பேசியதாவது:
வில்லியனுாரில் விவசாயிகள் தங்கள் விளையபொருட்களை விற்பனை செய்ய உழவர் சந்தை ஏற்படுத்த வேண்டும். தெரு நாய்களுக்கு தடுப்பூசி போட்டு, கருத்தடை செய்ய வேண்டும். சுல்தான்பேட்டை வக்பு வாரியத்திற்கு சொந்த இடத்தில் அப்பகுதியில் வசிக்கும் வறுமைகோட்டிற்கு கீழுள்ள வீடற்றவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்ட வேண்டும்.
வில்லியனுார் லுார்து அன்னை ஆலய 150வது ஆண்டு விழாவையொட்டி, அங்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும்.
பவுணர்மி அன்று மூன்று சிவத்தலங்களை இணைக்கும் சிவசிந்தனை நடைபயணத்ததை பக்தர்கள் கடைபிடித்து வருகின்றனர். திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ளது போல் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறைகள், ஓய்வு விடுதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.
வில்லியனுார் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும். இளைஞர்களின் விளையாட்டு திறன்களை மேம்படுத்த வில்லியனுாரில் நவீன உள்விளையாட்டரங்கம் ஏற்படுத்த வேண்டும். ஆதிதிராடர் மக்களுக்காக சமுதாய நலக்கூடம் கட்ட வேண்டும். வில்லியனுாரை முழுமையான நகரமாக மாற்ற வேண்டும். பெருகி வரும் குடியிருப்புகளுக்கு சீரான மின் வினியோகம் செய்ய வில்லியனுாரில் 25 மெகாவாட் திறன் கொண்ட துணை மின்நிலையம் அமைக்க வேண்டும்’ என்றார்.
