/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மோகித் கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர் பிறந்த நாள் விழா
/
மோகித் கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர் பிறந்த நாள் விழா
ADDED : பிப் 27, 2024 06:37 AM

வில்லியனுார் : வில்லியனுார் மோகித் கன்ஸ்ட்ரக்சன் ரவிக்குமார் பிறந்தநாள் விழா நடந்தது.
விழாவை முன்னிட்டு மணக்குளவிநாயகர் கோவிலில் நண்பர்கள் தங்கதேர் இழுத்தனர். தொடர்ந்து திருக்காமீஸ்வரர் கோவில், பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
நண்பர்கள் சார்பில் ஒதியம்பட்டு, வில்லியனுார், பத்துக்கண்ணு உள்ளிட்ட பகுதியில் நலத்திட்ட உதவிகளும், சேந்தநத்தம் சந்தோஷ் நண்பர்கள், அரியாங்குப்பம் பேபிசாரா இல்லம், துத்திப்பட்டு ஒலாந்தரை சிறுவர் இல்லம், ரெட்டியார்பாளையம் முதியோர் இல்லம் உள்ளிட்ட இடங்களில் அன்னதானமும், ஆட்டோ ஓட்டுனருக்கு சீருடைகள், 10 பேருக்கு தொழில் செய்வதற்கு தள்ளுவண்டி, 20க்கும் மேற்பட்ட மீன் வியாபாரிகளுக்கு ஐஸ் பாக்ஸ், நடைபாதை கடை வியாபாரிகளுக்கு குடைகள், 300க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு பேக் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
விழாவில் எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், ஜான்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., சுகுமாறன், முன்னாள் சேர்மன் பாலமுருகன் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள், தொழிலதிபர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

