ADDED : பிப் 06, 2026 05:31 AM

அரியாங்குப்பம்: புதுச்சேரியில் மெடிக்கல் மற்றும் மொபைல் கடையில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
நோணாங்குப்பத்தை சேர்ந்தவர் பவானி, 26; அரியாங்குப்பம் டோல்கேட் பகுதியில் மெடிக்கல் வைத்துள்ளார். நேற்று காலை அவர் கடையை திறக்க சென்றபோது, கதவு பூட்டு உடைக்கப்பட்டு, திறந்து கிடந்தது.
உள்ளே சென்று பார்த்த போது, டிராவில் இருந்த 15 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் லேப்டாப் திருடு போயிருந்தது. புகாரின் பேரில், அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
அதே போல், ராஜா தியேட்டர் சந்திப்பு, காமராஜர் சாலையில் மொபைல் கடை வைத்திருப்பவர் அமுதாராணி, 48. இவரது கடை ெஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடப்பதாக அருகில் இருந்தவர்கள் அவருக்கு தகவல் தெரிவித்தனர். அவர், சென்று பார்த்த போது, கடையில் வைத்திருந்த 15 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் மொபைல் போன் உதிரி பாகங்கள் திருடு போயிருந்தது.
புகாரின் பேரில், பெரிய கடை போலீசார் வழக்குப் பதிந்து, பணம் திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர். மேலும், உருளையன்பேட்டை பகுதியில், மர்ம நபர்கள் ஒரு கடையின் ெஷட்டர் பூட்டை உடைக்க முயற்சி செய்துள்ளனர்.
