/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாலா திரிபுரசுந்தரி கோவிலில் நாளை மூல மந்திர ஹோமம்
/
பாலா திரிபுரசுந்தரி கோவிலில் நாளை மூல மந்திர ஹோமம்
பாலா திரிபுரசுந்தரி கோவிலில் நாளை மூல மந்திர ஹோமம்
பாலா திரிபுரசுந்தரி கோவிலில் நாளை மூல மந்திர ஹோமம்
ADDED : ஜன 31, 2026 05:08 AM
புதுச்சேரி: இரும்பை பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில், நாளை (1ம் தேதி) மூல மந்திர ஹோமம் நடக்கிறது.
திண்டிவனம் சாலை, இரும்பையில் பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மூல மந்திர ஜெப ஹோம விழா, இன்று (31ம் தேதி) காலை 8:30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து முதல் கால யாக பூஜை, மூலமந்திரம் ஜபம், மாலை 6:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை மற்றும் மூலமந்திர ஜெபம் நடக்கிறது. நாளை (1ம் தேதி) காலை 7:00 மணிக்கு மூன்றாம் கால மூலமந்திர ஜபம், மூல மந்திர ஹோமம், மகா பூர்ணாஹூதி, மூலவருக்கு மகா அபிேஷகம், கலச அபிேஷகம், தீபாராதனை, இரவு 7:00 மணிக்கு மூலவர் உற்சவர் விேஷச அலங்காரம், லகு நவாவரண பூஜை, அம்பாள் உள்புறப்பாடு நடக்கிறது. நாளை மறுநாள் 2ம் தேதி காலை 10:00 மணிக்கு மூலவர் அபிேஷகம், இரவு 7:00 மணிக்கு அம்பாள் ஊஞ்சல் உற்சவம், தொடர்ந்து ைஹதராபாத் நாட்டிய கல்பா குழுவின் குச்சுப்புடி நடனம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் டிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.

