நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: தாவுதுபேட்டையில் வீட்டின் வாசலில் நிறுத்தியிருந்த மொபட் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, தாவுதுபேட்டை, நகராட்சி குடியிருப்பை சேர்ந்தவர்சிவக்குமார், 34; பெயிண்டர். இவர் கடந்த 23ம் தேதிதனது சுசுகி அக்சஸ் மொபட்டை (பி.ஒய் 01 டி.ஏ 8724) இரவு 10:30 மணிக்கு வீட்டின் வாசலில் நிறுத்தியிருந்தார்.
மறுநாள் காலை 5 மணிக்கு பார்த்தபோது, மொபட்டை காணவில்லை.அக்கம், பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சிவக்குமார் அளித்த புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து, மொபட்டை தேடி வருகின்றனர்.

