ADDED : ஜன 03, 2025 01:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புத்தாண்டு தினத்தில் ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகள் புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் பிறந்துள்ளது.
புத்தாண்டு ஜன., 1ம் தேதி நள்ளிரவு 12:00 மணி முதல் அடுத்த 24, மணி நேரத்தில் புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் 10 பெண் குழந்தைகள், 9 ஆண் குழந்தைகள் உள்பட 19 குழந்தைகள் பிறந்தன.
இதில்,10 குழந்தைகள் சுகப்பிரசவமாகவும், 9 குழந்தைகள் அறுவை சிகிச்சையிலும் பிறந்தன.
மேலும், ஜிப்மர் மற்றும் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் குழந்தைகள் பிறந்துள்ளன.
அதே தினத்தில் புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் 24 பேர் சாலை விபத்தில் காயமடைந்து அனுமதிக்கப்பட்டனர். 26 பேர் சண்டையில் காயமடைந்து அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.