ADDED : மே 24, 2025 03:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: காரைக்கால், தெற்கு தொகுதியில் 40 லட்சம் ரூபாயில் அமைக்கப்பட்ட ஹிளுருப் பள்ளி வாசல் நடைபாதையை நாஜிம் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.
காரைக்கால், தெற்கு தொகுதி, ஹிளுருப்பள்ளி ஜாமியா மஸ்ஜித் ஜமாத்தாகளின் கோரிக்கையை அடுத்து, பள்ளிவாசல் பகுதியில் நடை பாதை, தொகுதி மேம்பாட்டு நிதி 40 லட்சம் ரூபாய் மதிப்பில், வண்ணக் கற்களால் அமைக்கப்பட்டது. இதனை நாஜிம் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார். இரண்டாம் கட்டமாக குளத்தை துார்வாரி, அதனை சுற்றி நடைபாதை அமைப்பதற்காக ஒரு கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியில் நகராட்சி உதவி பொறியாளர் லோகநாதன், இளநிலை பொறியாளர் சத்திய பாலன், புதுச்சேரி ஹஜ் கமிட்டி தலைவர் இஸ்மாயில் உட்பட பலர் பங்கேற்றனர்.