UPDATED : நவ 26, 2026 07:32 PM
ADDED : நவ 26, 2026 07:32 PM
அரியாங்குப்பம்: டெங்கு காய்ச்சல் பரவலை தொடர்ந்து, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் கொசு மருந்து தெளிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலுக்கு 4 பேர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதையடுத்து, சுகாதாரத்துறை டெங்குவை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
டெங்குவிற்கு உயிரிழந்த 4 பேரில், நோணாங்குப்பத்தை சேர்ந்த பள்ளி, மாணவியும், அரசு மருத்துவமனையில் பணி செய்த தவளக்குப்பத்தை சேர்ந்த நர்ஸ் உயிரிழந்தனர்.
அதனை தொடர்ந்து, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட கட்டபொம்மன் நகர், பெரியார் நகர் பகுதிகளில் ஆணையர் விநாயகமூர்த்தி முன்னிலையில் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் வாகனம் மூலம் கொசு மருந்து தெளித்தனர்.
தொடர்ந்து, தவளக்குப்பம் அடுத்த டி.என்.,பாளையம் பகுதியில் நேற்று மாலை கொசு மருந்து தெளிக்கப்பட்டது.
