ADDED : அக் 10, 2026 02:37 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: நெல்லித்தோப்பு தொகுதியில் டெங்கு காய்ச்சல் பரவமால் தடுக்க கொசு மருந்த தெளிக்க வேண்டும் என கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மலேரியா துணை இயக்குனரிடம் கோரிக்கை வைத்தார்.
நெல்லித்தோப்பு தொகுதி எம்.எல்.ஏ., கார்த்திகேயன் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டெங்கு காய்ச்சலைத் தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மருத்துவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
குயவர்பாளையத்தில் உள்ள துணை இயக்குநர் (மலேரியா) அதிகாரிகளைச் சந்தித்து, பொதுமக்களுக்கு கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
தொகுதி முழுதும் கொசு மருந்து தெளிக்க வேண்டும் என, வலியுறுத்தி கோரிக்கை வைத்தார்.
