UPDATED : அக் 14, 2026 09:10 PM
ADDED : அக் 14, 2026 08:56 PM
அ நிறம் | அளவு
வில்லியனுார்: அரியூர் பாரதி நகர் முருகன் கோவில் அருகே வசிப்பவர் மாணிக்கம் என்பவரது 25 வயது மகள். இவருக்கு திருமணமாகி ஒன்னரை வயதில் பெண் குழந்தை உள்ளது.
இவர் வில்லியனுார் பகுதியில் உள்ள ஒரு மழலையர் பள்ளியில் ஊழியராக பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் கை குழந்தையுடன் வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தாய் மகாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து, கைக்குழந்தையுடன் மாயமான இளம் பெண்னை தேடி வருகின்றனர்.
