ADDED : மே 29, 2026 05:27 AM
அ நிறம் | அளவு
அரியாங்குப்பம்: அரியாங்குப்பம், காக்கையாந்தோப்பை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி ராஜலட்சுமி, 34; காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 12 வயதில் மகள் இருக்கிறார். கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்னை இருந்து வருகிறது.
இந்நிலையில், வீட்டில் இருந்த தனது மகளை அழைத்து கொண்டு, ராஜலட்சுமி நேற்று முன்தினம் மாயமானார். உறவினர்கள் உள்ளிட்ட பலஇடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, நாகராஜன் கொடுத்த புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
