ADDED : மே 07, 2025 12:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: இட்லி கடை நடத்தி வந்த பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
குமரகுருபள்ளம் அரசு குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் வசந்தி, 55; கடற்கரை சாலையில் இட்லி கடை நடத்தி வந்தார். கடந்த 1ம் தேதி காலை 6.00 மணிக்கு டீ குடித்து விட்டு வருவதாக வீட்டில் இருந்தவர்களிடம் கூறிவிட்டு வெளியே சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. வசந்தியின் மகன் வினோத் கொடுத்த புகாரின் பேரில், பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.