ADDED : டிச 01, 2024 04:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால் : வீட்டு வேலை செய்யாததை தாய் கண்டித்ததால் காணாமல் போன மகளை போலீசார் தேடி வருகின்றனர்.
காரைக்கால் அடுத்த கீழக்காசாகுடி, வெங்கடாசலபதி நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் மகள் நிஷாலினி,16; பிளஸ் 2 படித்து வருகிறார்.
மழை காரணமாக நேற்று முன்தினம் வீட்டில் இருந்த நிஷாலினி, வீட்டு வேலை செய்யாமல் இருந்ததை அவரது தாய் வெண்மதி கண்டித்தார்.
அதில் கோபித்தக் கொண்டு ஆக்கூரில் உள்ள பாட்டி வீட்டிற்கு செல்வதாக கூறிச் சென்றவர் அங்கும் செல்லவில்லை. வீட்டிற்கும் வரவில்லை.
இதுகுறித்து வெண்மதி கொடுத்த புகாரின் பேரில் கோட்டுச்சேரி போலீசார் வழக்குப் பதிந்து நிஷாலினியை தேடி வருகின்றனர்.

