ADDED : நவ 17, 2026 07:27 PM

புதுச்சேரி: அன்னையின் 51வது நினைவு நாளை முன்னிட்டு அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னை வசித்த அறை தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
அன்னை என்று பக்தர்களால் அன்புடன் அழைக்கப்படும் (மிர்ரா அல்ஃபாசா) 1973ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் முக்தியடைந்தார். அவரின் நினைவு நாள், மகா சமாதி தினமாக ஆண்டுதோறும் நவம்பர் 17ம் தேதி புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் அனுசரிக்கப்படுகிறது.
அதன்படி, அன்னை நினைவு நாளை முன்னிட்டு நேற்று புதுச்சேரி ஒயிட் டவுன் மரைன் வீதியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னை வசித்த மற்றும் தங்கியிருந்த அறைகள் காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர்.
முன்னதாக, அன்னையின் சமாதி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஆசிரமம் வாசிகளின் கூட்டு தியானம் மற்றும் வழிபாடுகள் நடந்தது. அன்னையின் அறை தரிசனத்திற்காக செயின்ட் ழீல் வீதி வழியாக பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
