ADDED : அக் 20, 2025 12:34 AM
பாகூர்: கார் மோதி தாய், மகன் காயமடைந்தனர்.
முதலியார்பேட்டை உழந்தைகீரப்பாளையம் புவன் கரே வீதியை சேர்ந்தவர் ஆனந்த், 42; ஜிப்மர் மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் கிளார்க்காக பணியாற்றி வருகிறார்.
இவர், கடந்த 15ம் தேதி பாகூரில் நண்பர் ஒருவரின் துக்க நிகழ்வில், தனது குடும்பத்தினருடன் பங்கேற்று விட்டு அன்று இரவு வீட்டிற்கு செல்வதற்காக, பாகூர் சிவன் கோவில் அருகே பங்களா தெரு சந்திப்பில் சாலையோரம் நின்றிருந்தார்.
அவ்வழியாக சென்ற பலினோ கார் (டி.எல். 2சி ஏ.கி.யூ., 7749) ஆனந்த் மனைவி சங்கீதா 35; மகன் தீபக்தேவ் 7; ஆகியோர் மீது மோதியது.
காயமடைந்த இருவரும் தனியார் மரத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து, கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.