UPDATED : நவ 06, 2026 07:05 PM
ADDED : நவ 05, 2026 03:24 PM
அ நிறம் | அளவு
பாகூர்: கடலுார் அடுத்த வானமாதேவி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ் 27; இவரது தாய் விஜயலட்சுமி 56; இவர் இருவரும், கடந்த 1ம் தேதி கிருமாம்பாக்கம் அருகே உள்ள வம்பாபேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர். பின்னர், அன்று இரவு ஜெயப்பிரகாஷ் தனது தாய் விஜயலட்சுமியை, பைக்கில் ஏற்றிக்கொண்டு ஊருக்கு திரும்பினர்.
இவர்கள் கிருமாம்பாக்கம் அரசு தொடக்கப்பள்ளி அருகே சென்ற போது, வேகத்தடையின் மீது பைக் ஏறிச் சென்ற போது, விஜயலட்சுமி நிலை தடுமாறி சாலையில் விழுந்து படுகாயமடைந்தார்.
உடனே, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
