ADDED : செப் 05, 2026 06:11 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி அரசு சார்பில், அன்னை தெரேசா நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, பாரதிப் பூங்காவில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு தற்காலிக சபாநாயகர் அன்பழகன், அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், ராஜவேலு, எம்.எல்.ஏ.,க்கள் ஜான்குமார், அய்யப்பன், விக்னேஷ் கண்ணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காங்., சார்பில், மாநில தலைவர் வைத்திலிங்கம் தலைமையில் முன்னாள் அமைச்சர் கந்தசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
