/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிரிலெப்டில் தாறுமாறாக புகுந்து செல்லும் வாகன ஓட்டிகள் ராஜிவ் சிக்னலில் உச்சக்கட்ட விபத்து அபாயம்
/
பிரிலெப்டில் தாறுமாறாக புகுந்து செல்லும் வாகன ஓட்டிகள் ராஜிவ் சிக்னலில் உச்சக்கட்ட விபத்து அபாயம்
பிரிலெப்டில் தாறுமாறாக புகுந்து செல்லும் வாகன ஓட்டிகள் ராஜிவ் சிக்னலில் உச்சக்கட்ட விபத்து அபாயம்
பிரிலெப்டில் தாறுமாறாக புகுந்து செல்லும் வாகன ஓட்டிகள் ராஜிவ் சிக்னலில் உச்சக்கட்ட விபத்து அபாயம்
ADDED : ஏப் 08, 2025 04:03 AM

புதுச்சேரி: ராஜிவ் சிக்னலில் விதிமுறைகளை மீறி பிரிலெப்டில் புகுந்து செல்லும் வாகன ஓட்டிகளால் விபத்து ஏற்படுகிறது.
புதுச்சேரி ராஜிவ்காந்தி சிக்னல் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சந்திப்பாக உள்ளது. கிழக்குகடற்கரை சாலை, 100 அடி ரோடு, காமராஜர் சாலை, கோரிமேடு சாலை, வழுதாவூர் சாலை ஆகிய பிரதான சாலைகள் சங்கமிக்கும் இந்த சந்திப்பில் 24 மணி நேரமும் போக்குவரத்து பிசியாக இருக்கின்றது.
இந்த சந்திப்பில், போக்குவரத்து விதிமுறைகளை வாகன ஓட்டிகள் சுத்தமாக கடைபிடிப்பதே இல்லை. குறிப்பாக பிரிலெட்டில் போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துவது பல ஆண்டுகளாக தொடர்கதையாக உள்ளது.
இ.சி.ஆரில் இருந்து பைக்கில் வரும் வாகன ஓட்டிகளுக்கு கொஞ்சம் கூட பொறுமை இல்லை. சில நிமிடங்கள் பொறுமையாக காத்திருந்தால் ராஜிவ் சிக்னலை கடந்து 100 அடி ரோட்டிற்கு சென்றுவிடலாம். ஆனால், வாகன ஓட்டிகளுக்கு எல்லாமே குறுக்கு புத்தியாக உள்ளது. இ.சி.ஆரில் இருந்து வாகன ஓட்டிகள் பிரிலெப்ட் வழியாக காமராஜர் சாலையை தொட்டு, அங்கிருந்து சிக்னலில் தாறுமாறாக குறுக்காக புகுந்து, 100 அடி ரோட்டை நோக்கி பறக்கின்றனர்.
விதிமுறை மீறல் நடக்கும் இதே இடத்தில் டெம் போக்களில் அட்டூழியமும் அதிகரித்துள்ளது. பிரி லெப்ட் பகுதியில் வாகனங் கள் செல்ல முடியாத அளவிற்கு பயணிகளை ஆபத்தான முறையில் டெம்போக் களை நிறுத்தி ஏற்றி செல்லு கின்றனர். இதன் காரணமாக இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும்உச்சக்கட்ட விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
விதிமுறைகள் மீறல் நடக்கும் இடத்திற்கு சில அடி துாரத்தில் தான் போக்குவரத்து போலீசாரின் பூத் உள்ளது. ஆனால் தங்கள் கண் எதிரே நடக்கும் போக்குவரத்து விதிமுறைகளை கண்டும் காணாமல் உள்ளனர். அங்கிருந்து ஒரு அதட்டலான குரலை கூட கொடுப்பதில்லை.
சிக்னலையே மதிக்காத வாகன ஓட்டிகள், வேறு எந்த இடத்திலும் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்கவே போவதில்லை. அப்படி இருக்கும்போது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு என்ன தயக்கம். ஏதேனும் விபரீதம் ஏற்படும் முன், இப்பகுதியில் விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.